Monday, 19 September 2011

செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை _

http://www.youtube.com/watch?v=8GhRFvSw28Y&feature=player_embedded
முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று எதிர்வரும் சில தினங்களில் பூமியில் விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெப்ரிஸ் எனப்படும் குறித்த விண்கலத்தின் நிறை 6-7 டொன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செயற்கைக்கோளானது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழுமெனவும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு உடையும் துண்டுகளில் அதிகூடிய துண்டொன்றின் நிறை 350 பவுண்ட்கள் எனவும் இவை பூமியில் மனிதரொருவரை மோதுவதற்கான சாத்தியம் 3200 க்கு 1 என அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாசா வரும் நாட்களில் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது எப்பகுதியில் விழுமென நாசா விஞ்ஞானிகளால் கூட உறுதியாகக் கூற முடியாது.

அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எப்பகுதியிலும் இது விழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சூரியன்களைக் கொண்ட கோள்

இதேவேளை இரண்டு சூரியன்களை, ஒரு கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

கெப்ளர்-16பி எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கோளானது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளது.

ஆய்வாளர்களை அதிர வைத்த விசித்திர உயிரினம்!(படங்கள் இணைப்பு)


அண்மையில் பறக்கும் குட்டி தேவதை எனும் விசித்திரமான உயிரினம் ஒன்று பிடிபட்ட செய்தியினை பிரசுரித்திருந்தோம். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதைவிட விசித்திரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தடவியல் மற்றும் ஆய்வாளர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்தியுள்ளது இச்சம்பவம்.

குறித்த இச்சம்பவம் தொடர்பாக ஆங்கில இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி பின்வருமாறு:-

இங்கிலாந்தின் நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம உயிரினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்த உயிரனத்தின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதுபற்றி உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்ட தடவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மைத்தன்மைகள கண்டறியாது குழப்பத்தில் உறைந்து போயுள்ளார்கள்.

இந்த விசித்திர உயிரினத்தை முதன் முதலில் பார்த்த கிராமவாசி இது பற்றி குறிப்பிடுகையில்:-

இவ்வுருவத்தை முதலில் நான் பார்த்தவுடன் ஒரு சிசுவின் உடல் என நினைத்து உடனடியாக பொலீசாருக்கு எனது செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். பின்னர் அவர்கள் அவ்விடத்திற்கு வரும் முன்னர் நான் அருகில் சென்று பார்த்த போது வியப்படைந்தேன். காரணம் அது உண்மையில் ஒரு சிசுவின் உடல் அல்ல மாறுபட்ட ஒரு தோற்றத்துடன் காணப்பட்டது . இதனால் அதனை என்னவென்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை.என தெரிவித்தார்.

குறித்த உருவத்தை ஆய்வுளுக்காக எடுத்து சென்ற தடவியல் நிபுணர்கள் புறஊதா கதிர்வீச்சுப்படம் எடுத்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுவரை அடையாளம் காணப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறித்த உருவம் 10-20 செ.மீ நீளமுடன் மிகச்சிறிய அளவில் காணப்பட்டுள்ளது. மேலும் இதன் எலும்புகள் ஒரு சிசுவின் எலும்புகளை ஒத்ததாகவும் உடல் அமைப்பு மனித உடலமைப்பை ஒத்ததாகவும் காணப்படுகிறது.
முழுமையான 2கால்கள் மற்றும் கைகளுடன் தலையில் மெல்லிய திசுவுடன் மஞ்சள் நிறத்தில் முடி காணப்படுகிறது. கைகளில் சாதாரண மனிதர்களுக்கு உளள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் காணப்படுகிறது. இன்னுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதன் முதுகுப்பகுதியில் இலைகள் போன்று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமையும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிறவுண் (டீசழறn)நிறத்தில் காணப்படும் இதன் இறக்கை தூரப்பார்வைக்கு அச்சு அசல் ஒரு இலையாகவே காணப்படுகிறது.

இது பற்றி கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள் இது உரு மனித உருவமா? அல்லது பறவையா? அல்லது பூச்சி இனமா? என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இது பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாக உள்ளது எனவும் மனித இனம் எனின் இனப்பெருக்க உறுப்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த உயிரினத்துக்கு இவ்வாறு இருக்கவில்லைஇ மற்றும் இறந்த நிலையிலும் இது துர்நாற்றம் எதுவும் வீசவில்லை எனவே எமக்கு இது பெரும் வியப்பை தந்திருக்கிறது என குறிப்பிட்டார்கள்

Tuesday, 13 September 2011

விந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்சை ?

நோய் தோன்றினால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்கிறோம். பழங்காலத்தில் காடுகளில்கிடைக்கும் தாவரங்களே மருந்து போல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனங்களில் கிடைக்கும் மூலிகைகளையே மருந்தாக உட்கொள்கின்றனர்.

அந்த வகையில் சிறியவகை மரமான காட்டு எலுமிச்சையானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கிழக்கு வங்கத்தினைச் சேர்ந்த இந்த மரம். தென் இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது.

ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் இது வளர்கிறது. இதன் இலைகள், வேர், கனிகள் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்திலிருந்து எளிதில் ஆவியாகும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பல வேதிப்பொருட்கள் உள்ளன. லினலுல், லினலைல் அஸிடேட், ப்ரைடிலின், எபிப்ரைடிலினால், கெம்ஃஸ்டிரால், ஸ்ட்கம ஸ்டிரலல், அட்லான்டேலைடு, அட்லாஃபெல்லைன், ஔரப்டென், மர்மிசின்

தோல் வியாதிகள்

இலைகளின் கசாயம் தோல் வியாதிகளுக்கு மருந்தாகிறது. வேர் கிருமிகளுக்கு எதிரானது. தசை பிடிப்பு வலி போக்குவது. செயல்தூண்டுவி. வீக்கங்கள் மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளின் எண்ணெய் காய்ச்சல் போக்கும், பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு தடவப்படும்.

விந்து உற்பத்தி அதிகரிக்கும்

இத்தாவரம் காய்ச்சல் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ருசி மற்றும் பசி தூண்ட உதவுகிறது. இது உடல் வண்ணத்தை ஒளிரச்செய்யும் என்றும் விந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்க வல்லது எனவும் இராஜநிகண்டு என்னும் மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் ஊறுகாயாகத் தயாரிக்கப்படுகிறது.
.................................................................................................................................................................

மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது.

அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடியது. சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

எகிப்திய கல்லறை சித்திரங்களின் அடிப்படையில் இத்தாவரம் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. இது கசப்பானது, மலமிளக்கி, தூக்கத்தை தூண்டும்.

இந்திய மருத்துவத்தில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பால் உணர்வு தூண்டுவி. வலுவேற்றி, தசை சுருக்கத்திற்கு எதிரான செயல்திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் ஸ்டிராய்டல்,குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள்,அஸ்பராகைன் மற்றும் ஃபிளேவனாய்டுகள் காணப்படுகின்றன.

சிறுநீர் நோய்களை குணமாக்கும்

இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும், சிறுநீரக கோளாறுகள், மஞ்சள்காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும் இதனை சிபாரிசு செய்துள்ளார்.

நரம்பு மண்டல நோய்

இது தைலங்கள் தயாரித்தலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.

குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது. வேர் கிழங்கு வெல்லப்பாகுடன் சேர்த்து இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. புதிய வேரின் சாறு தேனுடன் கலந்து சுகமளிக்கும் மருந்தாகிறது. பட்டை நச்சுத்தன்மை கொண்டது.

மலட்டுத்தன்மை போக்கும்

இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள் சதாவேரி கிரிதா, ஃபாலகிரிதா, நாராயணதைலம், விஷ்ணுதைலம்,பிரமேக மிகிர தைலம் ஆகியவை முக்கியமானவை.

இத்தாவரத்தின் சாறுடன், வெண்ணெய், பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு சதாவேரி கிருதா தயாரிக்கப்படுகிறது. இத்துடன் வால்மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சதாவேரி சாறுடன் வெண்ணெய், பசுவின் பால் ஆகியவற்றுடன் வேறுசில மருந்துகள் மிகச்சிறிய அளவில் கலந்து ஃபாலகிரிதா தயாரிக்கப்படுகிறது. இது விந்து சுரப்பினை அதிகரிக்கப்பயன்படுத்தப்படுகிறது.

பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி பெண்குறி கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு பாலுடன் கலந்து தரப்படுகிறது.
.................................................................................................................................................................

Monday, 5 September 2011

உறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூஉறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூ

இயற்கையானது உண்ண உணவும் பாதுகாப்பான இருப்பிடத்தையும் அளித்துள்ளது. பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு எத்தகைய சத்துக்களை தருகின்றனவோ அதுபோல பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்

தும்பைப் பூ

ஒரு பலம் தும்பைப் பூவை சேகரித்து கால்படி நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகினால் தலை தொடர்பான நோய்கள் குணமடையும்

மூக்கில் நீர் வடிதல் குணமடையும், தலையில் ஏற்படும் பீணிச நோய் சரியாகும். மூளை சுறுசுறுப்படையும்.

எருக்கம் பூ

எருக்கலைப் பூ, கிராம்பு, மிளகு இவற்றை அரைத்து தினமும் சிறிதளவு மாத்திரை வடிவில் உட்கொள்ள வேண்டும்

இதனால் கடுமையான இரைப்பு குணமாகும். இருமல் நோய் தீரும்

வேப்பம் பூ

வேப்பம்பூ, இலுப்பைபூ, சிவனார் வேம்பின் பூ இவற்றை சம அளவு எடுத்து அரைத்து கசாயமாக்கி தினசரி இருவேளை குடித்து வர பித்த பைத்தியம் குணமாகும். அறிவு விருத்தியாகும்.

முல்லைப் பூ

முல்லைப்பூவை தலையில் சூடுவது மட்டுமல்ல அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதி குணமடையும். மனத்தெளிவு உண்டாகும். முல்லைப்பூவின் சாறு பிழிந்து அதன்சாறு மூன்று துளி மூக்கில் விட தலைவலி குணமடையும்.

முல்லைப் பூவை அரைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் உடலில் பூசி குளிக்க சொரி, சிரங்கு போன்றவை குணமடையும். முல்லைப்பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் கருப்பை நோய்களை குணமாக்கும்.

மதனகாமப்பூ

மதனகாமப் பூ, குங்குமப் பூ, மராட்டி மொக்கு இவற்றை சம எடை எடுத்து முருங்கை பூச்சாற்றினால் அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரையாக்கி நிழலில் உலர்த்தி, காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் பசுவின் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடல் பலம் உண்டாகும். உறவின் போது விந்து விரைவில் வெளிப்படாது.

எள் பூ

எள்ளின் பூவை பறித்து பல்லில் படாமல் விழுங்கிவிட கண்பார்வை குணமாகும். எத்தனை பூக்களை சாப்பிடுகிறோமோ அத்தனை ஆண்டுகள் கண் வலி வராது. இதனால் கண் ஒளி அதிகரிக்கும். கண்ணில் பூ விழாது.
....................................................................................................................................................................

கறிவேப்பிலையின் பயன்கள்

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை ... மென்று சாப்பிட... ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

* வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும்.

3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.  இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப் பிலை பயன்தரும்.

அதுமட்டுமல்ல - நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.

.............................................................................................................................................................

புகைப்பழக்கத்தை மறக்கச் செய்யும் சூரியகாந்தி விதைகள்

நாடு முழுவதும் பரவலாகப் பயன்படும் சூரியகாந்தியின் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் மருத்துவ பயன்களும் சூரிய காந்தியின் விதைகளில் அடங்கியுள்ளன. இன்றைக்கு தமிழ்நாட்டில் 80 சதவிகித சமையலறையை சூரிய காந்தி விதை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

சப்போனின்கள்-ஹீலியான்தோஸைடுகள்,A,B&C லினோலிக்,மிரிஸ்டிக்,பாலிமிட்டிக், ஒலியாக்,ஸ்டீரியக் அமிலம்,வைட்டமின்கள் A,D,மற்றும் E காணப்படுகின்றன. விதைகளில் அசிட்டோன்,ஃபார்மிக் அமிலம் மெத்தில் ஆல்கஹால் காணப்படுகின்றன.

கொழுப்புச் சத்து குறையும்

சீதபேதியை குணப்படுத்தும்.காய்ச்சல், வயிற்றுவலி, வலியுடன் சிறுநீர்கழிதல், கண்வலியுடன் வீங்குதல், மண்ணீரல், கோளாறுகள், புண்களை ஆற்றும்.

விதைகள் பாக்டீரியா கொல்லிகள். சிறுநீர் கழிவை அதிகரிக்கும். கபம் வெளியேற்றும், காய்ச்சல் தணிக்கும், இருமல் ஜலதோஷத்திற்கு பயன்தரும். காற்று குழாய்,பேச்சுக்குழாய், மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்தும். எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

விதையில் உள்ள பொட்டாசியம் சத்து மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். ஒரு கோப்பை சூரிய காந்தி விதையில் ஆயிரத்து 300 மில்லி கிராம் பொட்டாசியம் காணப்படுவதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.

கால் கோப்பை சூரிய காந்தி விதையில் 32 சதவிகிதம் மெக்னீசியம் காணப்படுகிறது. இது நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. இதயம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.

மெனோபாஸ் டென்சனை குறைக்கும்

இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மெனோபஸ் கால டென்சனை குறைக்க உதவுகிறது.

புகைப்பழக்கத்தை மறக்கடிக்கும்

ஆண்டுகணக்கில் சிகரெட் புகைப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதில் சூரிய காந்தி விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கறுப்பு தோலை நீக்கிய சூரிய காந்தி விதைகளை சில நாட்கள் தொடர்ந்து மென்று தின்று வந்தால் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற பழக்கம் மறந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
.................................................................................................................................................................