Monday, 5 September 2011

உறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூஉறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூ

இயற்கையானது உண்ண உணவும் பாதுகாப்பான இருப்பிடத்தையும் அளித்துள்ளது. பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு எத்தகைய சத்துக்களை தருகின்றனவோ அதுபோல பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்

தும்பைப் பூ

ஒரு பலம் தும்பைப் பூவை சேகரித்து கால்படி நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகினால் தலை தொடர்பான நோய்கள் குணமடையும்

மூக்கில் நீர் வடிதல் குணமடையும், தலையில் ஏற்படும் பீணிச நோய் சரியாகும். மூளை சுறுசுறுப்படையும்.

எருக்கம் பூ

எருக்கலைப் பூ, கிராம்பு, மிளகு இவற்றை அரைத்து தினமும் சிறிதளவு மாத்திரை வடிவில் உட்கொள்ள வேண்டும்

இதனால் கடுமையான இரைப்பு குணமாகும். இருமல் நோய் தீரும்

வேப்பம் பூ

வேப்பம்பூ, இலுப்பைபூ, சிவனார் வேம்பின் பூ இவற்றை சம அளவு எடுத்து அரைத்து கசாயமாக்கி தினசரி இருவேளை குடித்து வர பித்த பைத்தியம் குணமாகும். அறிவு விருத்தியாகும்.

முல்லைப் பூ

முல்லைப்பூவை தலையில் சூடுவது மட்டுமல்ல அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதி குணமடையும். மனத்தெளிவு உண்டாகும். முல்லைப்பூவின் சாறு பிழிந்து அதன்சாறு மூன்று துளி மூக்கில் விட தலைவலி குணமடையும்.

முல்லைப் பூவை அரைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் உடலில் பூசி குளிக்க சொரி, சிரங்கு போன்றவை குணமடையும். முல்லைப்பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் கருப்பை நோய்களை குணமாக்கும்.

மதனகாமப்பூ

மதனகாமப் பூ, குங்குமப் பூ, மராட்டி மொக்கு இவற்றை சம எடை எடுத்து முருங்கை பூச்சாற்றினால் அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரையாக்கி நிழலில் உலர்த்தி, காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் பசுவின் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடல் பலம் உண்டாகும். உறவின் போது விந்து விரைவில் வெளிப்படாது.

எள் பூ

எள்ளின் பூவை பறித்து பல்லில் படாமல் விழுங்கிவிட கண்பார்வை குணமாகும். எத்தனை பூக்களை சாப்பிடுகிறோமோ அத்தனை ஆண்டுகள் கண் வலி வராது. இதனால் கண் ஒளி அதிகரிக்கும். கண்ணில் பூ விழாது.
....................................................................................................................................................................

No comments:

Post a Comment