Monday, 29 August 2011

எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக பயன்படும் புகையிலை

புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம். நீண்ட காலம் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் சுவாசப் பிரச்சனையுடன் புற்றுநோயும் வரும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்ட புகையிலை மருந்தாகவும் பயன்படுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். எச்.ஐ.வி எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய் தவறான பழக்க வழக்கங்களினால் வருகிறது.
சிறிய குழந்தைகளுக்கும் தவறான ஊசி முறையால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எச்.ஐ.வி பாதித்த நபர்களின் ஆயுட்காலம் எண்ணப்படுகிறது என்ற அச்சுறுத்தல் இருந்தாலும் அந்த நோய்க்கும் புதிய சிகிச்சை அளிக்க மருந்து தயாராகிறது.
இந்த மருந்து புகையிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான விடயம். தற்போதைய மருந்துகள் பாலூட்டி செல்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் எச்.ஐ.விக்கு புகையிலையில் மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் லண்டன் பல்கலைகழகத்தின் செயின்ட் ஜார்ஜஸ் பகுதியை சார்ந்த பேராசிரியர் தலைமையிலான குழு வெற்றிகண்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட புகையிலை மூலம் மருந்து தயாரிக்க ஆகும் செலவு தற்போதைய மருந்தை காட்டிலும் 100 மடங்கு குறைவாகும். 2008ம் ஆண்டு முடிவில் 15 வயதுக்கு மேற்பட்ட 83 ஆயிரம் பேருக்கு பிரிட்டனில் எச்.ஐ.வி பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment