Monday 29 August 2011

குழந்தைகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் பால்

விளையாட்டு மற்றும் பள்ளியில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சீக்கிரம் சோர்ந்து விடுவார்கள்.
இதுபற்றி கனடாவின் ஹாமில்டன் நகரில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு குழு தலைவர் பிரையன் டிம்மன்ஸ் கூறியதாவது: உடலுக்கு அதிகம் வேலை கொடுக்கும் போது சிறுவர்கள் சீக்கிரம் சோர்வடைவார்கள்.
உடலில் நீர்ச்சத்து 1% குறைந்தால், உற்சாகம் 15% குறையும். எனவே உடலின் நீர்ச்சத்து இழப்பை போக்க நடுநடுவே நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
"ஸ்போர்ட்ஸ் டிரிங்க்" என்று சில இருக்கின்றன. இதையோ தண்ணீரோ குடிப்பதற்கு பதில் பால் குடிப்பது சிறந்தது.
இதன்மூலம் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம் உடலுக்கு அதிகம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment