Monday 29 August 2011

தொலைதூர விண்வெளியில் நட்சத்திர மண்டலம் உருவான ரகசியம்: ஆய்வில் புதிய தகவல்

விண்வெளியின் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்தை பற்றி முந்தய கணிப்புகளுக்கு மாறாக புதிய கருத்துக்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் ஸ்பிட்சர் நுண்நோக்கி மூலம் ஆய்வு செய்த போது பூமியில் தொலைதூரத்தில் உள்ள விண்வெளி நட்சத்திர மண்டலக் கூட்டத்தில் கடும் வெப்ப காற்றுகள், பயங்கரமான ஒளிவீசும் நட்சத்திரங்கள் இருப்பதை அறிய முடிந்துள்ளது.
முன்பு மதிப்பிட்டதை விட நட்சத்திரங்கள் உருவாவது மிக அதிகமாக உள்ளது. வெப்பமயமான காற்று வெளியேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது என கலிபோர்னியா தொழில்நுட்ப இன்ஸ்டியூட்டின் நாசா ஸ்பிட்சர் அறிவியல் மைய ஆய்வாளர் கூறினார்.
தொலை விண்வெளி நட்சத்திர மண்டலத்தில் காற்று விரிவாக்கம் காரணமாக புதிய நட்சத்திரங்கள் வேகமாக உருவாகும் திறன் குறித்த ஆய்வு கட்டுரை ஆகஸ்ட் 1ம் திகதி விண்வெளி இயற்பியல் இதழில் வெளியாகிறது.
பலநூறு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய விண்வெளி நட்சத்திர மண்டலப்பகுதியில் முழு உருவம் கொண்ட நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்த நட்சத்திரங்கள் சூரியனை விட 100 மடங்கு அடர்த்திக் கொண்டவையாக ஒளிமிக்கவையாக உள்ளன.
                                                                                                                                                              

No comments:

Post a Comment