எதற்கெடுத்தாலும்
மனதை அதிகம் அலட்டிக் கொள்வதே மன அழுத்தத்திற்கு காரணம் என்கிறது
ஆயுர்வேதம். அடைய விரும்பும் லட்சியத்தை எட்ட முடியாமல் போதல். பதற்றமாக
செயல்படுதல், உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் போன்றவை மன அழுத்தத்திற்கு
காரணமாகிறது. இதனால் மன நலம் மட்டுமல்லாது உடல்நலமும்
பாதிப்பிற்குள்ளாகிறது.
உடல்நல பாதிப்புகள்
மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் உடலின்
ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும். மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை
குறைக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும். அடிக்கடி மன அழுத்தம்
ஏற்பட்டால், ரத்தக் கொதிப்பு அதிகமாகி, இதயம் பாதிக்கப்படும். வயிற்றில்
அல்சர் ஏற்பட்டு புண் உண்டாகும்.
சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் மன
அழுத்தத்தினால்தான் ஏற்படுகிறது. உணவும் மன அழுத்தமும் உடற்பயிற்சி,
யோகா, தியானம் போன்றவை மன அழுத்தம் போக்கும். இது தவிர நாம் உண்ணும் உணவும்
மன அழுத்தத்தை போக்கும். அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா – மன
அழுத்தத்திற்கு சிறந்த மருந்து. நரம்புகளை பலப்படுத்தும்.
மூட்டு, திசுக்கள், இவற்றை காக்கும். நோய்
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நல்ல உறக்கத்தை உண்டாக்கும். வைட்டமின்
சத்துக்கள் அமெரிக்காவில் உள்ள அலாபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட
ஆராய்ச்சியின் படி வைட்டமின் ‘சி’ மன அழுத்தம் உண்டாக காரணமான ஹார்மோன்களை
கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.
ஆரஞ்சு ஜுஸ் வைட்டமின் ‘சி’ செறிந்தது.
ஆனால் அதைவிட சிறந்தது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய், ஒரு ஆரஞ்சை விட
இருமடங்கு வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. நெல்லி ஜூஸ் தினமும் சாப்பிட்டால்
மிகவும் நல்லது. அதிக கார்போ-ஹைடிரேட் உணவுகளும், பீன்ஸ், பருப்பு வகைகள்
போன்றவற்றை மன அழுத்தத்தை குறைக்கும்.
இவை செரோடோனின் என்ற ஹார்மோன் அளவை
அதிகரிக்க உதவும். இந்த ஹார்மோன் குறைந்தால் மன அழுத்தம் சுலபமாகத்
தாக்கும். பச்சை காய்கறிகள், கீரைகள், ‘பி’ வைட்டமின் செறிந்தவை. இவற்றை
உணவில் சேர்த்துக் கொண்டால், செரோடோனின், டோஃபாமைன் போன்ற ஹார்மோன்கள்
உற்பத்தியை ஊக்குவிக்கும். டென்சன் குறைக்கும் பழச்சாறு பழச்சாறுகள்,
குல்கந்த் செரித்த பால், லஸ்ஸி, உட்கொள்ளவும். உணவில் ஏலக்காய்,
கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கொள்ளவும்.
பாதம் பருப்பு தேங்காய் இவைகள் மன
அழுத்தத்தை குறைக்கும். சீரகம் உடலுக்கு வலிவு தரும் உணவு செரிக்க உதவும்.
ஜாதிக்காய் ஆண்மை பெருக்கி, டானிக், டென்ஷனை குறைக்கும். மனதை
அமைதிப்படுத்தும்.ஏலக்காய் டானிக், ஆண்மை பெருக்கி, ஞாபக சக்தி மேம்படும்.
அதிமதுரம் டானிக், உடலை வலுவாக்கும்.
மன அழுத்தம் குறைக்கும் ஓட்ஸ் ஓட்ஸ்
கஞ்சி மன அழுத்தத்தை குறைக்க உதவும். இந்த கஞ்சியுடன் வாழைப்பழத்தை
சேர்த்துக் கொண்டால், தூங்க உதவும். மெலாடோனின் ஹார்மோன் உண்டாக்கும்.
முளை கட்டிய உளுந்தும் மன அழுத்தம் போக்க வல்லது. வேர்க்கடலை அடங்கிய
சாக்லேட் மனதை அமைதிப்படுத்த உதவும் என்டோர்பின்ஸ் ஐ ஊக்குவிக்கும். மீன்
உணவுகள் மனஅழுத்தம் உண்டாகும் அக்ரிசன் ஐ குறைக்கும்.
....................................................................................................................................................................
No comments:
Post a Comment